விளையாட்டு

கொரோனா அச்சத்தால் ஐபிஎல் போட்டிகளை ஒத்தி வைத்தது பிசிசிஐ!

Summary:

Ipl

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 75 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கர்நாடகாவை சேர்ந்த நபர் ஒருவர் இந்நோயால் உயிரிழந்துள்ளார்.

இதனால் வரும் மார்ச் 29 ஆம் தேதி நடக்கவிருந்த ஐபிஎல் டி20 போட்டிகள் அனைத்தையும் வரும் ஏப்ரல் 15-ம் தேதிவரை ஒத்திவைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளை கட்டுப்படுத்தினால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முடியும் என்ற முயற்சியில் பல்வேறு நாட்டில் உள்ள விளையாட்டுகளை அனைத்தும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. 


Advertisement