முன்னேறிய மும்பை!! சறுக்கிய கொல்கத்தா!! புள்ளி பட்டியலில் எந்த அணி எந்த இடம்?? முழு விவரம் இதோ..ipl-2021-latest-points-table-updates

ஐபில் சீசன் 14 T20 போட்டியின் தற்போதைய புள்ளி விவர பட்டியல் நிலவரம் குறித்து பார்ப்போம்.

ஐபில் சீசன் 14 T20 போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கொரோனா காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படாவிட்டாலும், வழக்கமான எதிர்பார்ப்புகளுடன் ஐபில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதுவரை 5 போட்டிகள் நடந்து முடிந்துள்ளநிலையில் 2 புள்ளிகளுடன் டெல்லி அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

ipl t20

நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணியை வெற்றிபெற்றதன் மூலம் புள்ளி பட்டியலில் 5 வது இடத்தில் இருந்து தற்போது 2 புள்ளிகளுடன் 2 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது மும்பை அணி. இரண்டு புள்ளிகளுடன் பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திலும், அதே இரண்டு புள்ளிகளுடன் பெங்களூரு அணி 4 வது இடத்திலும் உள்ளது.

நேற்றைய போட்டியில் தோல்வியை சந்தித்த கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்து 2 புள்ளிகளுடன் 5 வதுஇடத்திற்கு சென்றுள்ளது. ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் 6 மற்றும் 7 வது இடத்தில் உள்ளது. தோனி தலைமையிலான சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடமான 8 வது இடத்தில் உள்ளது.

ipl t20