தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
கொரோனா வைரஸ் அச்சம்: ஐபில் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல்.! கங்குலி விளக்கம்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டுவரும் T20 ஐபில் கிரிக்கெட் போட்டிகள் இந்த ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி தொடங்க உள்ளது. சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 8 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்று விளையாட உள்ளது. போட்டி தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், உலகம் முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸால் இந்த ஆண்டு ஐபில் போட்டிகளை தடைசெய்யப்பட்ட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியானது. ரசிகர்கள் மைதானத்திற்கு வரும்போதே, வெளிநாட்டு வீரர்கள் மூலம் வைரஸ் பரவவோ வாய்ப்பு இருப்பதால் போட்டிகள் தடைசெய்யப்படலாம் என கூறப்பட்டது.
இந்நிலையில், கொல்கத்தாவில் செய்தியாளா்களை சந்தித்த BCCI யின் தலைவர் கங்குலி இதுபற்றி கூறும்போது, ஐபிஎல் இம்மாதம் 29-ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி தொடங்கும் என்றும், அனைத்து நாடுகளில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது, எனவே இந்தியாவிலும் திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் என கூறினார்.
மேலும், மருத்துவ குழுவின் ஆலோசனை படி போட்டியை பார்க்கவரும் ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் வைரஸ் தோற்று ஏற்படாமல் பாதுகாக்க முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கங்குலி கூறியுள்ளார்.