ஒருவழியாக முடிவுக்கு வந்தது இந்த வருட ஐபிஎல்! போட்டிகள் எந்த நாட்டில் நடக்கிறது? எப்போது நடக்கிறது?

ஒருவழியாக முடிவுக்கு வந்தது இந்த வருட ஐபிஎல்! போட்டிகள் எந்த நாட்டில் நடக்கிறது? எப்போது நடக்கிறது?


ipl 2020 date announcement

இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க இருந்த ஐபில் T20 கிரிக்கெட் தொடர் கொரோனா காரணமாக தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெறுமா - நடைபெறாதா என்ற சந்தேகம் நிலவி வந்தது. இந்தநிரையில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என ஐ.பி.எல். நிர்வாக குழு தலைவர் பிரிஜேஷ் படேல் தகவல் தெரிவித்துள்ளார்.

தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்று ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளதால், போட்டியை எங்கள் நாட்டில் நடத்தலாம் என அந்நாட்டு அரசு விருப்பம் தெரிவித்தது. அதேபோல் ஐபிஎல் போட்டியை தங்கள் நாட்டில் நடத்தலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம், மற்றும் நியூசிலாந்து ஆகியவை பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்தன. 

ipl

இதுகுறித்து ஐ.பி.எல். தலைவர் பிரிஜேஷ் படேல், ஐ.பி.எல். தொடரை நடத்துவது குறித்து மத்திய அரசிடம் அனுமதி கேட்டு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் தற்போது ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்துள்ள பிரிஜேஷ் படேல் "ஐபிஎல் போட்டியின் விவரங்கள் 7 நாள்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.