விளையாட்டு

டெல்லி வெற்றியால் புள்ளி பட்டியலில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்! எந்த அணி எந்த இடம்?

Summary:

IPL 2019 points table up to 26th match

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 26 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் சென்னை, கொல்கத்தா, மும்பை மற்றும் டெல்லி அணிகள் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் உள்ளது. புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதிபெற முடியும் என்பதால் அணைத்து அணிகளும் தீவிரமாக விளையாடி வருகிறது.

இந்நிலையில் இதுவரை நடந்த 7 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள சென்னை அணி முதல் இடத்திலும், தலா நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

இந்நிலையில் நேற்று கொல்கத்தா, டெல்லி அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம் 6 இடத்தில் இருந்த டெல்லி அணி தற்போது நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. டெல்லி அணியின் வெற்றியால் பஞ்சாப் மற்றும் கைதராபாத் அணிகள் புள்ளி பட்டியலில் கீழே சென்றுள்ளது.

பஞ்சாப் அணி ஐந்தாவது இடத்திலும், கைதராபாத் அணி 6 வது இடத்திலும் உள்ளது. 6 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள ராஜஸ்தான் அணி 7 வது இடத்திலும், விராட்கோலி தலைமையிலான பெங்களூர் அணி இதுவரை நடந்த 6 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட வெற்றிபெறாமல் 8 வது இடத்திலும் உள்ளது.


Advertisement