இந்தியா விளையாட்டு

கடைசியில இப்படி ஆகிப் போச்சே! கொல்கத்தா அணியின் ஷாருக்கான் அதிரடி டுவிட்.!

Summary:

ipl 2019 - dd vs kkr - sharuk khan twit ganguly

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.

இளம் வீரர் சுபம் கில் மற்றும் ரசலின் வழக்கமான அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்கள் எடுத்தது. சுபம் கில் 65, ரசல் 45 ரன்கள் எடுத்தனர்.

தொடர்ந்து பேட்டிங் செய்த டெல்லி அணி ஆரம்பம் முதலே அதிரடி காட்ட துவங்கியது. அந்த அணியின் அனுபவ வீரர் ஷிகர் தவான் கடைசிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியாய் இருந்தார். 18.5 ஓவர்களில் டெல்லி அணி 7 விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டெல்லி அணியில் ஷிகர் தவான் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் டெல்லி அணிக்கு எதிராக விளையாடிய 2 போட்டிகளிலுமே தோல்வியை சந்தித்துள்ளது கொல்கத்தா அணி. இது குறித்து அந்த அணியின் உரிமையாளர் ஷாரூக்கான், சவுரவ் கங்குலிக்கு அதிரடியாக ஸ்பெஷல் ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

அதில், “சுப்மன் கில், ரசல் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் எங்கள் அணியின் பவுலிங்கில் தடுமாற்றத்தால் தோற்றது சிறிய வருத்தம் உள்ளது. இருப்பினும் ஒரு நேர்மறையான விஷயம் எங்கள் அணிக்கு நடந்தது என்னவென்றால் வெற்றி பெற்ற டெல்லி அணி பக்கம் எங்கள் தாதா கங்குலி இருந்தார். வாழ்த்துக்கள் டெல்லி” என பதிவிட்டுள்ளார். 


Advertisement