இந்தியா விளையாட்டு

சென்னை அணியில் 3 அதிரடி மாற்றம்; இறுதிப் போட்டிக்கு செல்ல கைகொடுக்குமா?

Summary:

ipl 2019 - csk - 3 changes - next match delhi

ஐபிஎல் சீசன் 12 இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் ஒரு சில போட்டிகளே மீதமுள்ள நிலையில் எந்த அணி இந்த சீசனில் சாம்பியன் பட்டத்தை வெல்லப் போகிறது என்று தெரிந்துவிடும். ப்ளே ஆப் சுற்றுக்கு மும்பை, சென்னை, டெல்லி, ஐதராபாத் அணிகள் தகுதி பெற்றன.

இந்நிலையில், முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகளான மும்பை, சென்னை அணிகளுக்கு இடையே பிளே ஆப் சுற்றில் குவாலிபயர்-1 நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. சிஎஸ்கேவின் சொந்த மண்ணில் இப்போட்டி நடைபெற்றதால் சென்னை அணி வெற்றி பெறும் என்ற ஆவலோடு ரசிகர்கள் காத்திருந்தனர்.

(Picture courtesy: iplt20.com/BCCI)

ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இப்போட்டியில் சென்னை அணி மும்பை அணியிடம் பரிதாபமான தோல்வியை தழுவியது. இதனால் குவாலிபயர்-2 போட்டியில் ஆடி வெற்றி பெற்றால்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற ஐதராபாத், டெல்லி அணிகளுக்கு இடையேயான பரபரப்பான ஆட்டத்தில் ரிஷப் பண்டின் அதிரடி ஆட்டத்தால் டெல்லி அணி வெற்றி பெற்றது. இதனால் நாளை சென்னை அணி பலம் வாய்ந்த டெல்லி அணியுடன் மோத உள்ளது.

இதில் சென்னையில் மூன்று முக்கிய மாற்றங்கள் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து சொதப்பும் ஷேன் வாட்சனுக்கு பதிலாக முரளி விஜய்யை துவக்க வீரராக களமிறக்கவும், மிடில் ஆர்டரில் துருவ் சோரேவையும் கொண்டுவரவும் திட்டமிடப்படுவதாகவும் தகவல்கள் தெரிகிறது.

அதே போல வேகப்பந்து வீச்சில் சென்னை அணி தீபக் சகாரை மட்டுமே நம்பியுள்ளதால், மோகித் சர்மா, ஸ்காட் குகேஜிலின் ஆகியோரில் ஒருவர் அணியில் சேர்க்கப்படலாம் என தெரிகிறது.


Advertisement