பேட்ஸ்மேன்களை ஏமாற்ற நினைத்து சொதப்பிய இந்திய வீரர்! கடுப்பான விராட்! நடுவர்களிடமிருந்து தப்பினார்! வைரல் வீடியோ!

பேட்ஸ்மேன்களை ஏமாற்ற நினைத்து சொதப்பிய இந்திய வீரர்! கடுப்பான விராட்! நடுவர்களிடமிருந்து தப்பினார்! வைரல் வீடியோ!



indin player miss field yesterday match

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மெற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. 

நேற்றைய ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணியானது 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்களை குவித்தது. இதனையடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிநியூசிலாந்து நிர்ணயித்த இமாலய இலக்கை அசால்ட்டாக அடித்து வெற்றி பெற்றது.  5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது, ஆட்டத்தின் கடைசி ஓவரை பும்ரா வீசினார். இதை எதிர் கொண்ட நியூசிலாந்து வீரர் ரோஸ் டெய்லர் பந்தை விளாசினார். அப்போது அங்கு பீல்டிங் நின்று கொண்டிருந்த மணீஷ் பாண்டே பந்தை பிடிக்க வேகமாக ஓடிவந்தபோது பந்தை அவர் பிடிக்காமல், பிடித்து போல் செய்கை செய்து நியூசிலாந்து வீரர்களை ஏமாற்ற நினைத்தார். 

இதனையடுத்து அவர் பீல்டிங் மிஸ் செய்த பந்தை ஜடேஜா, வேகமாக எடுத்து ரன் அவுட்டிற்கு வீச, அங்கு பேக்கப்பிற்கு பீல்டர் இல்லாததால், தேவையில்லாமல் மூன்று ஓட்டங்கள் என்று மொத்தம் நான்கு ஓட்டங்களை நியூசிலாந்து வீரர்கள் ஓடி எடுத்தனர். இதனைப்பார்த்த விராட் அதிரமடைந்தார்.

கிரிக்கெட் விதிப்படி பீல்டர்கள் இவ்வாறு ஏமாற்றக் கூடாது, அப்படி ஏமாற்றினால் 5 ஓட்டங்கள் அபராதம் வழங்கப்படும். ஆனால் இந்த போட்டியில் நடுவர்கள் அதனை கவனிக்காததால், அபராதத்தில் இருந்து தப்பியதாக கூறப்படுகிறது.