இந்திய ஆண்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை! வீர இந்திய பெண்மணிகள் என நிரூபித்த வீர மங்கைகள்!



indian women cricket team won

டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் 4-வது போட்டியிலும் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. மெல்பர்னில் நடந்த போட்டியில் 7 விக்கெட்டகள் வித்தியாசத்தில் இலங்னை அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

பெண்களுக்கான உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 14ஆம் ஆட்டத்தில் இன்று இந்திய அணி இலங்கையை எதிர்த்து விளையாடியது. 

இதுவரை பங்கேற்ற மூன்று ஆட்டங்களிலும் வெற்றிபெற்று ஏற்கெனவே அரையிறுதிக்குத் தகுதிபெற்றுவிட்ட இந்திய அணி, இந்த ஆட்டத்திலும் அசால்ட்டாக களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 113 ஓட்டங்கள் எடுத்தது.

India

இந்த ஆட்டத்தில் அதிகட்சமாக இலங்கை அணித்தலைவர் அத்தபத்து 33 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் பந்து வீச்சில் ராதா யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்தநிலையில்,114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 14வது ஓவரில் 3 விக்கெட் பறிகொடுத்த நிலையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிப்பெற்றது. இந்த போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ராதா யாதவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.