இந்தியா விளையாட்டு

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை மிரளவைக்கும் ஆஸ்திரேலியா அணி! தடுமாறும் இந்திய அணி!

Summary:

indian team playing very bad in test cricket


விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள  இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று காலை அடிலெய்டில் துவங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி, பேட்டிங்கை துவங்கிய இந்திய அணியில், லோகேஷ் ராகுலும், முரளி விஜயும் துவக்க ஆட்டக்காரர்களா களம் இறங்கினர். ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் தடுமாறி இருவருமே கேட்ச் கொடுத்து வெளியேறினர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி தடுமாற்றம்

அடுத்துவந்த விராட் கோலியும் மூன்று ரன்கள் எடுத்து கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார். ரஹானே 31 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இந்த நிலையில் இந்திய அணி 21 ஓவர்கள் வரையிலும் 4 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் சேர்த்து தடுமாறி வருகிறது. 


 


Advertisement