இந்தியா விளையாட்டு

அணைத்து விக்கெட்டுகளையும் தகர்த்த இந்திய அணி! சொற்ப ரன்களில் சுருண்டு விழுந்த ஆஸ்திரேலியா!

Summary:

indian team lead 290 runs

மெல்போர்னில் நடந்து வரும் 3 வது டெஸ்ட் போட்டியின் 3 ஆம் நாளான இன்று இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணி தனது விக்கெட்டுகளை இழந்து  தடுமாறி வருகிறது.

முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய புஜாராவும் அகர்வாலும் தங்களது பொறுப்பை உணர்ந்து நிதானமாக ஆடினர். அறிமுக போட்டியான இப்போட்டியில் மயங்க் அகர்வால் அரை சதம் அடித்தார். சிறப்பாக விளையாடிய அவர் 76 ரன்களில் அவுட் ஆனார். அவர் 8 பவுண்டரிகளையும் 1சிக்சரையும் விளாசினார்.

பிறகு விராட் கோலியும் புஜாராவும் ஆட்டத்தை தொடர்ந்தனர். சிறப்பாக ஆடிய  புஜாராவும் அரை சதம் அடித்தார். புஜாரா 68 ரன்களுடனும் விராட் கோலி 47 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 215 ரன்களை குவித்தது.  

இரண்டாம் நாளான நேற்று டெஸ்ட் போட்டிகளுக்கு உரித்தான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா சதம் அடித்தார். சதம் அடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 82 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.

அதன்பிறகு சிறப்பாக ஆடி வந்த புஜாராவும் 106 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அஜிங்கிய ரஹானே (34 ) ரிஷா பாண்ட் ( 39 ) ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். ரோகித் சர்மா(63 ) மற்றும் ஜடேஜா (4 ) ஆடிக் கொண்டிருந்த நிலையில் கேப்டன் விராட் கோலி டிக்லேர் செய்வதாக அறிவித்தார். முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்களை குவித்தது.

அதன்பிறகு களமிறங்கிய ஆஸ்திரேலியா மட்டையாளர்கள் யாரும் நிலைத்து நின்று ஆட முடியாதபடி இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி அவர்களது விக்கெட்டை விரைவாக வீழ்த்தினர்.

india vs austrelia 3'rd test க்கான பட முடிவு
ஆஸ்திரேலிய அணி 65.5 ஓவர்களில்151 ரன்களுக்கு அனைது விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது, இந்திய பந்து வீச்சாளர் பும்ரா 6 விக்கெட்டுகளும், ரவீந்திர ஜடேஜா 2  விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா 1 விக்கெட்டும், முகமது சமி 1 விக்கெட்டும் வீழ்த்தினார். 

 முதல் இன்னிங்ஸில் இந்தியாவை விட 290 ரன்கள் ஆஸ்திரேலியா அணி பின்தங்கியுள்ளது. இந்த நிலையில் இந்திய மறுபடியும் பேட்டிங்கை துவங்கியுள்ளது.


Advertisement