இலங்கை தொடருக்கான இந்திய இளம் அணி அறிவிப்பு.! சிஎஸ்கே வீரர்கள் பலருக்கு வாய்ப்பு.! கேப்டனாக ஷிகர் தவான்.!

இலங்கை தொடருக்கான இந்திய இளம் அணி அறிவிப்பு.! சிஎஸ்கே வீரர்கள் பலருக்கு வாய்ப்பு.! கேப்டனாக ஷிகர் தவான்.!


indian team against srilanka

இந்திய அணி இலங்கைக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஜூலை 13 முதல் 25 ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்தத்தொடரில் விளையாடப்போகும் வீரரகளின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 

கொரோனா பரவல் காரணமாக அனைத்து போட்டிகளிலும் ஒரே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இது குறித்து பிசிசிஐ தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்த இரண்டு தொடர்களுக்கு ஷிகார் தவானே கேப்டனாக இருப்பார் என்று அறிவித்துள்ளது. இந்திய அணியின் கேபடன் விராட் கோலியும், துணைக்கேப்டன் ரோகித் ஷர்மாவும் இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடரில் இருப்பதால், இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணைக்கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த முறை அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்  ருதுராஜ் கைக்வாட், தீபக் சஹர் மற்றும் கிருஷ்ணப்ப கெளதம் சாய் ஆகிய மூன்று பேர் இடம் பிடித்துள்ளனர். மேலும் நெட் பவுலராக சிஎஸ்கே வீரர் சாய் கிஷோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே போன்று கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான வருண் சக்ரவர்த்திக்கு இந்த தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


இலங்கை அணிக்கு எதிரான இரண்டு தொடர்களுக்கான இந்திய வீரர்களின் பட்டியல்:

ஷிகர் தவான்(கேப்டன்). புவனேஷ்வர் குமார்(துணை கேப்டன்), பிரித்வி ஷா,தேவ்தத் படிக்கல்,சூரியகுமார் யாதவ், ருதுராஜ் கெயிக்வாட், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா,நித்தீசு ராணா,இஷன் கிஷன், சஞ்சு சாம்சன், கிருஷ்ணப்ப கெளதம்,வருண் சக்கரவர்த்தி,சைனி, குருணல் பாண்டியா,ராகுல் சேத்தன் சக்காரியா, குல்தீப் யாதவ், யஸ்வேந்திர சாஹல்.