விளையாட்டு

பயிற்சியில் ஈடுபடாமல் இந்திய வீரர்கள் என்ன செய்கிறார்கள் பாருங்கள்! வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்

Summary:

Indian players resting at woods

உலகக்கோப்பை தொடரில் கலந்துகொள்ள இங்கிலாந்து சென்றுள்ள இந்திய வீரர்கள் ஓய்வு நேரத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் உள்ள இடங்களுக்கு சுற்றுலா சென்று பொழுதை கழித்து வருகின்றனர்.

கடந்த 22 ஆம் தேதி இங்கிலாந்திற்கு புறப்பட்டு சென்ற இந்திய வீரர்கள் நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுடன் பயிற்சி ஆட்டங்களில் ஆடினர். இதனைத் தொடர்ந்து இந்திய அணி தனது முதல் போட்டியில் வரும் ஜூன் 5 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது.

இதனால் இந்திய அணிக்கு கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேலாக ஓய்வு கிடைத்துள்ளது. முதல் பயிற்சி ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த இநீதிய அணிக்கு இரண்டாம் ஆட்டத்தில் கிடைத்த வெற்றி நல்ல உத்வேகத்தை அளித்துள்ளது. இந்திய வீரர்கள் கடந்த 29 ஆம் தேதி பக்கிங்காம் பேலஸில் இங்கிலாந்து மகாராணியை சந்தித்தனர்.

எந்நேரமும் பயிற்சியிலேயே ஈடுபடாமல் இயற்கையுடன் ஒன்றித்து இருந்தால் வீரர்கள் மனதளவில் புத்துணர்வு பெறுவர் என்ற நம்பிக்கையில் இந்திய அணி நிர்வாகம் வீரர்களுக்கு ஓய்வு அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வீரர்கள் அனைவரும் ஒரு காட்டுப்பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

அந்த சுற்றுலா பகுதியில் மரங்களால் ஆன வீடுகளில் தங்கியும், இயற்கை உணவுகளை உண்டும் தங்களது பொழுதை இனிமையாக கழிக்கின்றனர். மேலும் அங்கு வேலை செய்பவர்களை போல் சீருடைகளையும் அணிந்து புகைப்படங்களை எடுத்துள்ளனர். இதனை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.