உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கலக்கப்போகும் 11 இந்திய வீரர்கள் இவர்கள் தான்.!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கலக்கப்போகும் 11 இந்திய வீரர்கள் இவர்கள் தான்.!indian players for World Test Championship match

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டி நாளை இங்கிலாந்தில் இருக்கும் சவுத்தாம்டனில் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகள் மோதும் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு துவங்குகிறது.

இந்நிலையில், இந்த போட்டியில் விளையாடப் போகும் 11 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்குகிறது.  

இப்போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் மொகமது சிராஜ் எதிர்பார்க்கப்பட்டார்.  ஆனால் அவருக்கு இந்த போட்டியில் வாய்ப்பளிக்கவில்லை. இந்த 2020-21-ஆம் ஆண்டுகளில் சிராஜ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜிங்யா ரஹானே, ரிஷாப் பண்ட், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, பும்ரா, இஷாந்த் ஷர்மா.

நியூசிலாந்து: டிவான் கான்வே, டாம் லாதம், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ் அல்லது வில் யங், வாட்லிங், கைல் ஜாமிசன் அல்லது மேட் ஹென்றி, அஜாஸ் பட்டேல், டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, நீல் வாக்னெர்.