டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டிகள்: வரலாறு காணாத சாதனை படைத்திருக்கும் இந்தியா.!

டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டிகள்: வரலாறு காணாத சாதனை படைத்திருக்கும் இந்தியா.!


indian-palyes-record-in-paralympic

19 பதக்கங்களுடன் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கை முடித்திருக்கிறது இந்தியா. இது ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக்வரலாற்றில் இந்தியா இதுவரை வென்றிராத அளவுக்கு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் நேற்று ஆடவருக்கான எஸ்.எல் 3 பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வென்றார். அதே பிரிவில் இந்தியாவின் மனோஜ் சர்கார் வெண்கலப் பதக்கத்தை வென்றார். 

paralympic

இதனைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில், இந்திய வீரர் சுகாஷ் யத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார். அதேபோல் பேட்மிண்டனில் ஆடவர் எஸ்.எச். 6 பிரிவுக்கான இறுதிப் போட்டியில் கிருஷ்ணா நாகர் வெற்றிப்பெற்று தங்க பதக்கத்தை கைப்பற்றினார். பேட்மிண்டனில் மட்டும் இந்தியா 2 தங்கப்பதக்கங்களுடன் மொத்தமாக 4 பதக்கங்களை வென்றுள்ளது.

இந்நிலையில் தற்போது டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான போட்டிகள் முடிவடைந்து உள்ளன நிலையில், நடப்பு பாரா ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் 19 பதக்கங்களை வென்று குவித்துள்ளனர். 1968 முதல் 2016 வரைக்கும் பாராஒலிம்பிக்கில் இந்தியா 4 தங்கங்களுடன் 12 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்தது. தற்போது 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெங்கலம் உள்பட19 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. இந்தநிலையில், வெற்றிபெற்ற வீரர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.