தூக்கி வீசப்பட்ட முரளி விஜய்! அடுத்த இரண்டு டெஸ்ட் ஆட்டத்திற்கான இந்திய அணி அறிவிப்பு!

தூக்கி வீசப்பட்ட முரளி விஜய்! அடுத்த இரண்டு டெஸ்ட் ஆட்டத்திற்கான இந்திய அணி அறிவிப்பு!


indian-new-test-team-announced-for-next-two-test-matche

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவரும் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை கண்ட நிலையில் கடைசியாக நடந்து முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியை பெற்றது.

இந்நிலையில் இந்திய 1-2 என்ற நிலையில் பின்தங்கி உள்ளது. மேலும், கடைசி இரண்டு போட்டிக்கான இந்திய அணியை தற்போது அறிவித்துள்ளது பிசிசிஐ நிர்வாகம்.

தூக்கி வீசப்பட்ட முரளி விஜய்:

முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற்ற முரளி விஜய் கடைசி இரண்டு போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் 4 இன்னிங்சில் 20, 6, 0 மற்றும் 0 என மொத்தம் 26 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதிலும் இரண்டாவது டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸிலும் ஒரு ரன் கூட எடுக்க முடியாததால் மூன்றாவது டெஸ்டில் அவருக்கு பதிலாக தவான் இடம்பெற்று சற்று நன்றாகவும் செயல்பட்டார்.

2014ஆம் ஆண்டு சுற்று பயணத்தில் இந்திய அணி சார்பில் முரளி விஜய் அதிக ரன்கள் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Indian cricket team

குல்தீப் க்கு பதில் ரஞ்சி வீரர் ஹனுமா விஹாரி:
 
ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட பிறகு, குலதீப் க்கு டெஸ்ட் போட்டிகளிலும் அணியில் வாய்ப்பு கிடைத்தது. அதில் முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் சேர்க்கப்பட்டதால் குலதீப் க்கு ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடம் பெற்ற குலதீப் 9 ஓவர்களுக்கு 44 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் ஏதும் எடுக்காமல் ஏமாற்றியதால் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கடைசி இரண்டு போட்டிக்கு அவருக்கு இடம் அளிக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக ஆந்திரா ரஞ்சி அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹனுமா விஹாரிக்கு இடம் அளித்து ஆச்சரியப்படுத்தியது பிசிசிஐ நிர்வாகம்.

Indian cricket team

பிரிதிவி ஷா அணியில் சேர்ப்பு :

அண்டர் 19 கேப்டன் பிரிதிவி ஷா இந்திய ஏ அணியில் இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிராக அபாரமாக செயல்பட்டார். அதில் இரண்டு சதங்கள் மற்றும் அரைசதம் சாதித்து அசத்தினார். அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக ஆடிய நான்கு நாட்கள் போட்டியிலும் அற்புதமாக செயல்பட்டு அனைவரையும் அசத்தினார். இதனால் தற்போது இறுதி இரண்டு டெஸ்ட் போட்டியில் இவருக்கு இடம் கிடைத்துள்ளது. முரளி விஜய் இடத்தில் இவர் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி: 
விராத் கோஹ்லி (கேப்டன்), ஷிகார் தவான், லோகேஷ் ராகுல், பிருத்வி ஷா, புஜாரா, ரஹானே, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரிட் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஷர்டுல் தாகூர், கருண் நாயர், தினேஷ் கார்த்திக் (கீப்பர்), ஹனுமா விகாரி.