விளையாட்டு

முன்னாள் வீரர் சேவாக்கின் விருப்பத்தை நிறைவேற்றுவாரா........ டோனி

Summary:

indian cricket team-sewagh vs dhoni


இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான  கேப்டனாக விளங்கியவர் எம்.எஸ் தோனி, இந்திய அணிக்கு ஐ.சி.சி,யால் நடத்தப்பட்ட அனைத்து விதமான போட்டி தொடர்களிலும் இந்திய அணிக்கு சாம்பியன் பட்டத்தை பெற்று கொடுத்த பெருமை அவரையே சாரும்.

இவ்வாறு இந்திய அணியை உலக அரங்கில் கம்பீரமாக வழிநடத்தி வந்த தோனி முதன் முதலாக டெஸ்ட் தொடர்களில் தோல்விகளை சந்திக்க தொடங்கினார். பின்பு ஒருநாள் போட்டிகளிலும் பிரதிபலிக்க தொடங்கியது. இந்நிலையில் 2016ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி தாமாக முன்வந்து தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். கேப்டன் பதவியை ராஜினாமா செய்த தோனி கடந்த இரண்டு வருடங்களாக கோஹ்லி தலைமையில் சாதரண வீரராக விளையாடி வருகிறார்.

Image result for m.s dhoni

கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியிருந்தாலும் இந்திய அணிக்காக தோனி விளையாடி வருவது அவரது ரசிகர்களுக்கு ஆறுதலாக இருந்து வரும் நிலையில், மறுபுறம் ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரர்கள் தற்போது சிறப்பாக விளையாடி வருவதால், சீனியர் வீரரான தோனி இளைஞர்களுக்கு வழிவிட்டு விரைவில் ஓய்வு பெற வேண்டும் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.


இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக், தோனி 2019ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரை இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Image result for m.s dhoni

இது குறித்து சேவாக் பேசியதாவது, “தோனி 2019ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரை ஓய்வு பெற கூடாது, அவர் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடினாலும் தோனியை போன்ற அனுபவம் அவருக்கு கிடையாது. ஒருவேளை தோனி ஓய்வுபெற்று விட்டால் 2019ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு முன்னதாக ரிஷப் பண்ட்டிற்கு அதிகபட்சம் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் மட்டுமே கிடைக்கும். 300 போட்டிகளில் விளையாடிய தோனியின் இடத்தை அவர்  உலகக்கோப்பையில் நிச்சயம் நிவர்த்தி செய்ய முடியாது” என்றார்.
 


Advertisement