ரோஜர் ஃபெடரருடன் டென்னிஸ் களத்தில் விராட் கோலி; வைரலாகும் புகைப்படங்கள்.!
தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியை காண சென்ற விராட் கோலி, ரோஜர் ஃபெடரருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 , 5 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடியது. இந்நிலையில் டி20 போட்டிகள் சமநிலையில் முடிந்தது அதன்பிறகு தொடங்கிய டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி 2-1 என்ற முறையில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.

அதன் பிறகு தொடங்கிய ஒருநாள் போட்டி தொடரையும் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை வென்றது. இதைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது. முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 23ம் தேதி நியூசிலாந்தின் நேப்பியர் மைதானத்தில் நடைப்பெற உள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைப்பெற்று வரும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரை, மனைவி அனுஷ்கா சர்மாவுடன் கண்டு களிக்க கேப்டன் விராட் கோலி சென்றுள்ளார். அப்போது ரோஜர் ஃபெடரருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
What a day at the Australian open. ❤😍👌👌 An amazing way to finish the Australian summer. Forever grateful🙏😇❤#ausopen pic.twitter.com/fqOiekjH3F
— Virat Kohli (@imVkohli) January 19, 2019