ஆசை காட்டி மோசம் செய்த மகளிர் அணி; ஆண்கள் அணியாவது சாதிக்குமா! ஏக்கத்தில் ரசிகர்கள்

ஆசை காட்டி மோசம் செய்த மகளிர் அணி; ஆண்கள் அணியாவது சாதிக்குமா! ஏக்கத்தில் ரசிகர்கள்


india-won-the-toss-and-elected-to-bowl-first

இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணியினர் ஒரே நேரத்தில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றனர். ஒருநாள் தொடரில் சிறப்பாக ஆடிய இரு அணிகளுமே தொடரை கைப்பற்றியது. 

இந்நிலையில் இன்று நடைபெற்ற மகளிர் அணிகளுக்கான முதல் T20 போட்டியில் இந்திய மகளிர் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. பேட்டிங்கில் துவக்கத்தில் அதிரடியாக ஆரம்பித்த இந்திய மகளிர் பின்னர் சொதப்பியதே இந்த தோல்விக்கு காரணம். 

cricket

இந்நிலையில் அதே மைதானத்தின் ஆண்கள் அணிக்கான முதல் T20 போட்டி துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. 

இன்றைய ஆட்டத்தில் ரிசப் பண்ட் மற்றும் குருநல் பாண்டியா ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ராயுடு, ஜாதவ், குலதீப், சமி ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை. விக்கெட் கீப்பராக தோனியே ஆடுகிறார். 

cricket

முதலில் சிறப்பாக ஆட்டத்தை துவங்கி மகளிர் அணி தோல்வியடைந்ததில் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர். ரசிகர்களின் இந்த ஏமாற்றத்திற்கு ஆறுதலாக ஆண்கள் அணி வெல்லுமா என்பதை பார்ப்போம்.