8 வருடங்களுக்கு பிறகு மோசமான சாதனையை செய்த இந்திய அணி.! புலம்பும் ரசிகர்கள்.!

8 வருடங்களுக்கு பிறகு மோசமான சாதனையை செய்த இந்திய அணி.! புலம்பும் ரசிகர்கள்.!India white wash after 8 years

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி T20 , ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. T20 போட்டியை 5 - 0 என்ற கணக்கில் வெற்றிபெற்று இந்திய அணி முதல் முறையாக நியூசிலாந்து மண்ணில் T20 கோப்பையை கைப்பற்றியது.

இதனை அடுத்து நடந்த ஒருநாள் போட்டியில் மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்து அதிர்ச்சியை கொடுத்தது இந்திய அணி. இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெறும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்து 2 - 0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி டெஸ்ட் கோப்பையை கைப்பற்றியுள்ளது.

INDvsNZ

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-0 கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் எட்டு வருடங்களுக்குப் பிறகு டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.