இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர்.! ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.!

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர்.! ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.!


india west indies T20

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய, வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

முதலில் ஒருநாள் தொடர் பிப்ரவரி 6 ஆம் தேதி அன்று துவங்குகிறது. இதனையடுத்து டி20 தொடர் பிப்ரவரி 16 அன்றும் தொடங்குகின்றன. இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெறும் மூன்று டி20 ஆட்டங்களுக்கும் 75% பார்வையாளர்களை அனுமதிக்க மேற்கு வங்க அரசு முடிவெடுத்துள்ளது. 

இந்தநிலையில், மைதானத்தில் 75% ரசிகர்கள் அனுமதியுடன் போட்டிகள் நடக்கலாம் என மேற்கு வங்க அரசு அனுமதி அளித்ததையடுத்து ஈடன் கார்டன்ஸ் மைதானத்திற்கு 50,000 ரசிகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.