தோனியும் இல்லை கோலியும் இல்லை! ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது இந்திய அணி!india vs west indies team


உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 2019 உலக கோப்பையின் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையே நடைபெற்றது. அந்த போட்டியில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை அபாரமாக வென்றது. இந்தநிலையில் நாளை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து- நியூசிலாந்து இடையே நடைபெறுகிறது.

MS Dhoni

உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய இந்திய அணி அடுத்ததாக மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு மூன்று டி20, மூன்று ஒரு நாள் போட்டி, இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

இதற்கான வீரர்களின் தேர்வு, வரும் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் நடக்கவுள்ளதாகவும். அந்த ஆட்டத்தில் தோனி, கோலி, பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த தொடரில் ரோஹித் சர்மா இந்திய அணியின் தலைவராக செயல்படுவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.