வலைப்பயிற்சியில் புவனேஸ் குமார்; நாளை வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக களமிறங்குவாரா?

வலைப்பயிற்சியில் புவனேஸ் குமார்; நாளை வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக களமிறங்குவாரா?


india vs west indies match - puvanesh kumar

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட போட்டிகள் நிறைவடைந்த நிலையில் அரையிறுதி சுற்றுக்குள் நுழைவதற்காக அனைத்து அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்திய அணியை பொறுத்தவரையில் அரை இறுதிக்குள் நுழைவதற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

இதுவரை இந்திய விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று 9 புள்ளிகளை பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் மழையால் தடை பட்டது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் தொடர் காயங்களால் அவதிப்பட்டு வருவது கவலை அளிக்கிறது. துவக்க வீரரான ஷிகர் தவான் கட்டைவிரலின் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக உலக கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.

World cup 2019

ஷிகர் தவான் ஆடாதது குறையாகவே ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி அமைந்தது. ஏனெனில் கத்துக்குட்டி யான ஆப்கானிடத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். இதன் விளைவாக 225 ரன்களை ஆப்கானிஸ்தான் அணிக்கு இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. அதற்கு முன்பு பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் புவனேஷ்வர் குமாருக்கு, தொடை பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் பாதியில் வெளியேறினார்.

இந்நிலையில் நாளை இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது. இதற்கிடையில் இதற்கான பயிற்சியில் இந்திய அணி வீரர்கள் ஈடுபட்டனர். இதில் புவனேஷ்வர் குமாரும் பங்கேற்றார். ஆனால் இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்கமாட்டார் என தெரிகிறது.  

இதனால் ஆப்கான் அணிக்கு எதிராக ‘ஹாட்ரிக்’ விக்கெட் கைப்பற்றிய ஷமிக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புவனேஷ்வர் குமாரை அரையிறுதி போட்டிக்காக இந்திய அணி தயார்படுத்துவதாக தெரிகிறது.