இந்தியா விளையாட்டு

இந்தியா- இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி.! முதல் விக்கெட்டை தட்டி தூக்கிய தமிழக வீரர்.!

Summary:

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. இந்தநிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் இன்று தொடங்கியது. 

உலகத்தையே அச்சுறுத்திய கொரோனா பரவலுக்கு பிறகு ஓராண்டு கழித்து இந்தியாவில் நடக்கும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி இதுவாகும். கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக சென்னியில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இதனையடுத்து இன்று காலை தொடங்கியுள்ள இந்த போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இந்திய அணி பந்து வீச ஆரம்பித்தது. இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் இருவரும் நிதானமாக ஆடினர். 

துவக்க மட்டையாளர் ரோரி பர்ன்ஸ் 33 ரன்கள் எடுத்தநிலையில் அஸ்வின் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் டேனியல் லாரன்ஸ் பும்ரா ஓவரில் எல்.பி.டபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி 27 ஓவர்கள் முடிந்த நிலையில் 67 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தநிலையில் ஆடிவருகிறது. தற்போது டோமினிக் சிப்லே 26 ரன்களுடனும், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 4 ரன்களுடனும் களத்தில் ஆடிவருகின்றனர்.


Advertisement