விளையாட்டு

சீன்போட்ட ஆஸ்திரேலிய அணி வீரர்கள்! ரிவியூ கேட்டு ஆப்பு வைத்த இந்திய அணி!

Summary:

India vs Australia world cup match status

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. தற்போதைய நிலவரப்படி நியூசிலாந்து அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும், ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்திலும், இந்திய அணி ஆறாவது இடத்திலும் உள்ளது.

இந்நிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா விளையாடும் போட்டியானது மாலை 3 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. முதல் பேட் செய்த இந்திய அணி சிறப்பாக விளையாடி 5 விக்கெட் இழப்பிற்கு 50 ஓவர்கள் முடிவில் 352 ரன் எடுத்தது. இந்திய அணி வீரர் தவான் அதிகபட்சமாக 117 ரன் எடுத்தார்.

353 ரன் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆத்ரேலிய அணி வீரர்கள் தொடக்கத்தில் இருந்து நிதானமாக விளையாடி வெற்றியை நோக்கி நகர்ந்தது. ஆத்ரேலிய அணியின்  வீரர் ஸ்மித் அதிரடியாக விளையாடி 70 பந்துகளில் 69 ரன் எடுத்தார். ஒருகட்டத்தில் ஆத்ரேலியா அணி வீரர்கள் ஸ்மித் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் அதிரடியாக விளையாடி இந்திய அணி வீரர்களுக்கு சவாலாக இருந்தனர்.

மேலும், ஸ்மித், மேக்ஸ்வெல் இருவரும் ஒவொருமுறை ரன் அடிக்கும்போது கண்ணடித்தும், கைகளை சுழற்றியும் சீன் போட்டனர். அவர்களின் அந்த செயலானது ரசிகர்கள் உட்பட அனைவரையும் கடுப்பாக்கியது.

இந்நிலையில் புவனேஷ்வர் குமார் வீசிய ஓவரில் LBW முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார் ஸ்மித். முதலில் நடுவர் விக்கெட் கொடுக்காத நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி மூன்றாவது நடுவரிடம் ரிவியூ கேட்டு சிமித்தை வெளியேற்றினர். ஸ்மித் வெளியேறிய ஓரிரு பந்துகளில் மேக்ஸ்வெல் ஆட்டம் இழந்து வெளியேறினார்.


Advertisement