இதற்கு முன் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் இப்படி தோற்றதே இல்லை.! வரலாற்றில் முதல் முறை..!

இதற்கு முன் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் இப்படி தோற்றதே இல்லை.! வரலாற்றில் முதல் முறை..!



India vs Australia 2020 first odi match update

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது ஒருநாள் போட்டிங்களில் விளையாடிவருகிறது. மும்பையில் நடந்த இன்றைய முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 10 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

தவானுடன் ஜோடி சேர்ந்து லோகேஷ் ராகுல் நிதானமாக விளையாடிவந்தார். ஒருகட்டத்தில் ராகுல், தவான் இருவரும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டம் இழக்க, இந்திய அணி சற்று தடுமாறியது. அதன்பிறகு விளையாடிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, இந்திய அணி 49.1 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ind vs aus

256 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் வார்னர் மற்றும் பின்ச் இருவரும் அதிரடியாக ஆடி 37.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 258 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றனர்.வார்னர் 112 பந்துகளில் 128 ரன்களும், பின்ச் 114 பந்துகளில் 110 ரன்களும் எடுத்தனர்.

ஒரு விக்கெட்டுகளை கூட கைப்பற்ற முடியாமல் இந்திய அணி பந்து வீச்சாளர்கள் தடுமாறினார். முதல் ஆட்டத்திலையே இந்திய அணி மிக சொதப்பலாக விளையாடியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட் கூட இழக்காமல், ஆஸ்திரேலிய அணி அடித்த அதிகபட்ச ரன்கள் இதுவே. இதற்கு முன்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு பெங்களூரில் நடந்த ஆட்டத்தில் வார்னர் மற்றும் பின்ச் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 231 ரன்கள் அடித்ததே இதற்கு முந்தைய அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதன் மூலம் இந்திய அணி வரலாற்று தோல்வியை சந்தித்துள்ளது.