விளையாட்டு

முதல் முறையாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சாதனை செய்த இந்திய அணி ! என்ன தெரியுமா?

Summary:

India scored highest score against to Australia in first time

உலகக்கோப்பை 2019 கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 13 போட்டிகள் இதுவரை முடிந்துள்ள நிலையில் நியூசிலாந்து அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும், ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.

இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் ஆட்டம் இன்று மாலை 3 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. டாஸ் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து சிறப்பாக விளையாடியது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இந்திய அணி வீரர்கள் தடுமாறினாலும், அதன்பின்னர் சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்கினர்.

இந்திய அணி வீரர் தவான் 109 பந்துகளில் 117 ரன்னும், ரோஹித் சர்மா 70 பந்துகளில் 57 ரன், விராட்கோலி 77 பந்துகளில் 82 ரன், பாண்டியா 27 பந்துக்கு 48 ரன், தோணி 14 பந்துகளில் 27 ரன் என 50 ஓவர்கள் முடிவில் மொத்தம் 352 ரன்கள் எடுத்தனர். இதன்மூலம் ஆத்ரேலியா அணிக்கு 353 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுவரை இந்தியா, ஆஸ்திரேலியா இடையே நடந்த உலகக்கோப்பை போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி அடித்த அதிகபட்ச ரன் இதுதான். இன்றைய போட்டியில் சாதனை படைத்த இந்திய அணி வெற்றிபெறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement