44 வது செஸ் ஒலிம்பியாட்; தோல்வியே காணாமல் வீறுநடை போடும் இந்தியா: 2 வது சுற்றிலும் ஆதிக்கம்..!

44 வது செஸ் ஒலிம்பியாட்; தோல்வியே காணாமல் வீறுநடை போடும் இந்தியா: 2 வது சுற்றிலும் ஆதிக்கம்..!



India is going undefeated in the 44th Chess Olympiad

சென்னை, மகாபலிபுரத்தில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் நாளான நேற்று முன்தினம்முதல் சுற்று போட்டிகள் தொடங்கின. முதல் சுற்று போட்டிகளில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியதோடு, அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், நேற்று நடந்த 2 வது சுற்று போட்டிகளிலும் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

முதல் சுற்று: இந்திய ஆடவர் அணியின் 'ஏ ' பிரிவு அணி ஜிம்பாப்வே ஆடவர் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில்  4-0என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.  ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை எதிர் கொன்ட இந்தியா 'பி' அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. தெற்கு சூடான் அணியை எதிர் கொண்ட இந்தியா 'சி' அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

முதல் சுற்றில் இந்திய மகளிர் ஏ அணி தஜிகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய மகளிஎ ஏ அணி 4-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா 'பி' மகளிர் அணி, வேல்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் 4-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது இந்தியா 'சி' மகளிர் அணி ,ஹாங்காங் அணியை எதிர்கொண்டது இந்த போட்டியில்  4-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

2 வது சுற்று : மால்டோவா அணியை எதிர் கொண்ட இந்திய 'ஏ' அணி , அந்த வீழ்த்தி வெற்றி பெற்றது. எஸ்டோனியா அணியை எதிர் கொண்ட இந்திய 'பி' அணி , அந்த அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மெக்சிகோ அணியை எதிர் கொண்ட இந்திய 'சி'அணி, அந்த போட்டியில் வெற்றி பெற்றது.

பெண்கள் பிரிவு போட்டிகளில் இந்திய 'ஏ' அணி , அர்ஜென்டினா அணியை எதிர் கொண்டு அந்த அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.  இந்திய 'பி ' அணி , லாட்வியா அணியுடனான போட்டியில்  வெற்றி பெற்றது. இந்திய 'சி' அணி , சிங்கப்பூர் அணிய்டன் மோதிய போட்டியில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி நேற்று பங்கேற்ற 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றது.