இந்தியா விளையாட்டு

ஐபிஎல் போட்டியில் சிக்சர் அடிக்கும் பந்தை கேட்ச் பிடிக்கும் ரசிகர்களுக்கு என்ன பரிசு தெரியுமா?

Summary:

in ipl audience catch prize 2019

2019 ஐபிஎல் தொடரில் மைதானத்தில் அமர்ந்திருக்கும் ரசிகர்கள் பந்தை கேட்ச் பிடித்தால் அவர்களுக்கு வழங்கப்படும்.  பரிசு குறித்து பிசிசிஐ தற்காலிக செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் 2019ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் 23ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இந்த தொடரில் பேட்ஸ்மேன் சிக்சர் அடிக்கும் பந்தை மைதானத்தில் அமர்ந்திருக்கும் ரசிகர்கள் ஒரு கையில் பிடித்தால், ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

in ipl audience catch prize 2019 க்கான பட முடிவு

பிசிசிஐ தற்காலிக செயல் அதிகாரி அமிதாப் சௌத்ரி இது குறித்து கூறுகையில், வீரர்கள் அடிக்கும் சிக்சர்களை ஒரு கையில் பிடிக்கும் ரசிகர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும். மேலும் காண்போரை ரசிக்க வைக்கும் வகையில் பந்தை பிடிக்கும் அதிர்ஷ்டசாலி நபர் ஒருவருக்கு கார் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர். ஒவ்வொரு ஆட்டத்திலும் ரசிகர்கள் லட்சக்கணக்கில் பரிசுகள் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 


Advertisement