தோனி அடித்த அந்த சிக்சரை பார்த்துக்கொண்டே எனது உயிர் பிரிய வேண்டும்.. சுனில் கவாஸ்கர்!

தோனி அடித்த அந்த சிக்சரை பார்த்துக்கொண்டே எனது உயிர் பிரிய வேண்டும்.. சுனில் கவாஸ்கர்!


i-wish-to-watch-ms-dhoni-s-six-in-my-last-moments-says-sunil-gavaskar

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று சர்வதேச இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இச்செய்தி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்ப்படுத்தியது.

தோனியின் ஓய்வு அறிவிப்புக்கு பின்பு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை கூறி வந்தனர். இந்நிலையில் தற்போது கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரான சுனில் கவாஸ்கர் தோனியின் ஆட்டத்தை பற்றி கூறியுள்ளார்.

Sunil kavaskar

அதில் 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பிறகு அதே ஆண்டில் நடைப்பெற்ற ஐபிஎல் தொடரின் போது தோனியிடம் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார். அப்போது, இந்த உலகை விட்டு எனது உயிர் பிரிக்கிறது என்று தெரிந்தால் உடனே உலக கோப்பையை வெல்ல நீங்கள் அடித்த அந்த சிக்ஸரை பார்த்து கொண்டே சிரித்து கொண்டே தான் எனது உயிர் பிரிய வேண்டும் என சுனில் கவாஸ்கர் தோனியிடம் கூறியுள்ளார்.

அதனை கேட்டுவிட்டு தோனி சிரித்துள்ளாராம். மேலும் தோனி சிறந்த கேப்டன் எனவும் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.