தோனி இல்லாமல் இந்திய அணி தடுமாறுகிறது.! தோனி இருந்தால் ஒருபோதும் அந்த பயம் இருக்காது.! முன்னாள் வீரர் ஓப்பன் டாக்.!

தோனி இல்லாமல் இந்திய அணி தடுமாறுகிறது.! தோனி இருந்தால் ஒருபோதும் அந்த பயம் இருக்காது.! முன்னாள் வீரர் ஓப்பன் டாக்.!


holding talk about indian team

ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள், T20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இது குறித்து கருத்து தெரிவித்த மேற்கு இந்திய தீவுகள் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மைக்கேல் ஹோல்டிங் கூறுகையில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தோனி இல்லாமல் தடுமாறுவது எனக்கு உறுதியாகத் தெரியும். அந்த அணியில் தோனி இருந்தபோது இந்திய அணி சிறப்பாகச் சேசிங் செய்தது. டாஸ் வெல்ல வேண்டும் என்ற பயம் அவர்களுக்கு ஒருபோதும் இருந்ததில்லை.

michel holding

தற்போதைய அணியிலும் சிறந்த பேட்டிங் வரிசை உள்ளது. சில திறமையான வீரர்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதைப் பார்க்க முடிந்தது. ஆனாலும், தோனி மாதிரி ஒரு வீரர் அணிக்குத் தேவைப்படுகிறார். அவருடைய திறமை என்னவென்று அவருக்குத் தெரியும். இலக்கை எப்படி எட்டவேண்டும் என்பதும் அவருக்கு நன்றாக தெரியும். விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு தோனியைப் போன்ற வீரர் அவசியம் என தெரிவித்தார்.