புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
போட்டிக்காக காரில் சென்ற ஹாக்கி வீரர்கள்! மரத்தின் மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே 4 பேர் பலி!
மத்திய பிரதேச மாநிலத்தில் ஹாக்கி வீரர்கள், ஹாக்கி போட்டிக்கு சென்றுகொண்டிருந்தபோது சென்ற கார் விபத்துக்குள்ளானதில், 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் ஹோசங்காபாதில் ஹாக்கி போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்க இடார்சி என்ற பகுதியில் இருந்து ஒரு காரில் ஹாக்கி வீரர்கள் சிலர் சென்றுகொண்டிருந்தனர். அப்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்னானது.
Madhya Pradesh: Four national level hockey players dead, three injured, in a car accident in Hoshangabad pic.twitter.com/otLiRNQzoQ
— ANI (@ANI) October 14, 2019
இந்த விபத்தில் காரில் இருந்த 4 ஹாக்கி வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 3 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஹாக்கி வீரர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கு நடந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கோர விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.