விளையாட்டு

பயிற்சிலேயே அதிரடி காட்டிய ரோஹித் சர்மா... அனல் பறக்கும் வீடியோ காட்சிகள்.!

இந்த வருடம் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியானது கொரோனா காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19 ஆம் தேதியன்று நடைப்பெறவுள்ளது. இப்போட்டியில் முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன.

அதற்காக இரு அணியின் கேப்டன்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பயிற்சியில் ஈடுப்பட்ட அனல் பறக்கும் வீடியோ காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது ரோஹித் சர்மா பேட்டிங் செய்த போது ஸ்பின்னர் ஒருவர் வீசிய பந்தை மேலேறிச் சென்று நேராக தூக்கி அடிக்க பந்து மைதானத்துக்கு வெளியே பறந்து அங்கு ஓடும் பேருந்து ஒன்றின் ஜன்னலைப் பதம் பார்த்தது.


அக்காட்சியை மும்பை இந்தியன்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, அதில் பேட்ஸ்மென்கள் சிக்சர்கள் அடிப்பார்கள், லெஜண்ட்கள் மைதானத்துக்கு வெளியே அடிப்பார்கள்.ஆனால் ஹிட்மேன் அடித்த சிக்ஸ் மைதானத்தையும் தாண்டி ஓடும் பேருந்தைத் தாக்கியது' என்ற வாசகத்துடன் அந்த சிக்ஸரின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. 

 


Advertisement