இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் அதிக சிக்சர்களை விளாசி முதலிடத்தில் இருக்கும் வீரர்.! மூன்றாவது இடத்தில் தான் CSK வீரர்.!

இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் அதிக சிக்சர்களை விளாசி முதலிடத்தில் இருக்கும் வீரர்.! மூன்றாவது இடத்தில் தான் CSK வீரர்.!highest sixer in ipl 2021

2021 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றுடன் லீக் சுற்று நிறைவடைந்தது.  லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள்  பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது. 

2021 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஐபிஎல் 2021ல் இதுவரை நடைபெற்ற போட்டிகள் அடிப்படையில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்களின் விபரங்கள் தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கே எல் ராகுல் 13 போட்டிகளில் விளையாடி 30 சிக்சர்கள் மற்றும் 48 பவுண்டரிகளை விளாசி முதலிடத்தில் உள்ளார்.

ipl

இரண்டாவது இடத்தில் பெங்களூரு அணியின் மேக்ஸ்வெல் உள்ளார். மேக்ஸ்வெல் 14 போட்டிகளை விளையாடிய நிலையில் 21 சிக்சர்கள் மற்றும் 47 பவுண்டரிகளை அடித்துள்ளார். மூன்றாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்துராஜ் கெய்க்வார்ட் உள்ளார், அவர் 14 போட்டிகளில் விளையாடி 20 சிக்சர்களையும், 56 பவுண்டரிகளையும் விளாசியுள்ளார். மற்றொரு சென்னை வீரர் டூ பிளிஸிஸ் 20 சிக்சர்கள், 53 பவுண்டரிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.