மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
ஐபிஎல் 2024 போட்டிக்காக முழுவீச்சில் தயாராகும் ஹர்திக்; அசத்தல் ஒர்க்அவுட் வீடியோ இதோ.!
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராக இருந்து வரும் ஹர்திக் பாண்டியா, முக்கிய இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக உருவெடுத்து இருக்கிறார்.
2023 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் போது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அடுத்தடுத்த போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டார்.
மேலும், தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திலும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் அவரது பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
இந்நிலையில், எதிர்வரும் ஐபிஎல் 2024 தொடருக்காக ஹர்திக் பாண்டியா முழு வீச்சில் தயாராக வரும் நிலையில், இதற்காக தனது உடலையும் கட்டமைத்து வருகிறார். அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்து இருக்கிறார்.