
gowtham kampir talk about virat
உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொடூர வைரஸான கொரோனா உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அணைத்து வகையான விளையாட்டு போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
இதனால் விளையாட்டு வீரர்களும் வீட்டிற்குள்ளே முடங்கியுள்ளனர். இந்தநிலையில், விளையாட்டு வீரர்கள் சமூகவலைத்தளங்களில் உரையாடி வருவதும், தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுப்பதும் ரசிகர்களுக்கு விருந்தாய் அமைந்துள்ளது.
இந்தநிலையில் பிரபல ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய கவுதம் காம்பீர், கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு. நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் ஓட்டங்களை குவிக்கலாம். லாரா போல அதிகப்படியான ஓட்டங்களை குவிக்கலாம், காலீஸ் போல எதையும் ஜெயிக்காமலும் இருக்கலாம். இதுவரை விராட் கோலியும் ஒரு கேப்டனாக எதையும் ஜெயிக்கவில்லை. அவர் இன்னும் சாதிக்க வேண்டியது அதிகம் இருக்கிறது என கூறினார்.
தொடர்ந்து பேசிய காம்பீர், ஆட்டத்தில் அதிக ஓட்டங்களை பெறுவது பெரிய விஷயமல்ல அதனை செய்துக்கொண்டே இருக்கலாம். ஆனால் அணிக்காக கோப்பையை வெல்லவில்லை என்றால் கிரிக்கெட் வாழ்க்கை முழுமை பெறாது என கூறினார். விராட் கோலியின் சாதனைகளை உலகின் பல வீரர்களும் பாராட்டியுள்ளனர். ஆனால் கவுதம் காம்பீரின் கருத்து விராட் கோலியின் ரசிகர்களை வெறுப்படைய வைத்துள்ளது.
Advertisement
Advertisement