விளையாட்டு

கவுதம் காம்பிர் சொன்ன ஒத்த வார்த்தை..! செம கடுப்பில் சென்னை அணி ரசிகர்கள்!! ஒருவேளை அவர் சொன்னது நடந்துருமோ!!

Summary:

இந்தமுறையும் சென்னணி அணி முதல் சுற்றிலையே வெளியேறிவிடும் என தனது கருத்தினை கூறியுள்ளார் இந

இந்தமுறையும் சென்னணி அணி முதல் சுற்றிலையே வெளியேறிவிடும் என தனது கருத்தினை கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பிர்.

ஐபில் சீசன் 14 T20 போட்டிகள் நாளை மறுநாள் முதல் தொடங்க உள்ளது. வரும் 9 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில் மும்பை - பெங்களூரு அணிகள் மோதுகிறது. இரண்டாவது நாள் ஆட்டத்தில் சென்னை அணி டெல்லி அணியுடன் விளையாட உள்ளது.

இந்நிலையில் அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக தோனி தலைமையிலான சென்னை அணி வீரர்கள் கடந்த பல வாரங்களாக கடும் பயிற்சியில் உள்ளனர். கடந்த சீசனில் சென்னை அணி மோசமான தோல்வியை சந்தித்து முதல் சுற்றிலையே வெளியேறியது.

இதனால் இந்தமுறை தங்கள் பலத்தை நிரூபித்து கோப்பையை சென்னை அணி வெல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். ஆனால் ரசிகர்களின் நம்பிக்கையை பொய்யாகும் விதமாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பிர் கூறியுள்ள கருத்து சென்னை அணி ரசிகர்களிடையே அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இந்தமுறையும் சென்னை அணி முதல் சுற்றிலையே வெளியேறும் எனவும், சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாது எனவும் கூறியுள்ளார். ஆனால் இந்தமுறை சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா, மெயின் அலி, உத்தப்பா போன்ற வீரர்கள் இருப்பதால் இந்தமுறை சென்னை அணி மிக சிறப்பாக விளையாடும் என தங்கள் கருத்துக்களை பதிவிடுவருகின்றனர் சென்னை அணி ரசிகர்கள்..


Advertisement