விளையாட்டு

BCCI தலைவர் ஆக போகும் கங்குலிக்கு இப்படி ஒரு சோதனையா? புது பதவியால் வந்த சோதனை.

Summary:

Ganguli lose 7 crores for bcci president post

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. BBCI யின் பல்வேறு பதவிகளுக்கு விரைவில் தேர்தல் வருவதை ஒட்டி அதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் கங்குலிக்குதான் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் ஒருவேளை கங்குலி BCCI யின் தலைவராகிவிட்டால் அதனால் அவர் பலகோடிகளை இழக்க நேரிடும் என கூறப்படுகிறது.

தற்போது கிரிக்கெட் வர்ணனையாளர், IPL தொடரில் டெல்லி அணியின் ஆலோசகர், கிரிக்கெட் நிபுணர் என பல வேலைகள் செய்து அதன் மூலம் கோடிகளில் சம்பாதிக்கும் கங்குலி BCCI யின் தலைவராகிவிட்டால் இந்த வேலைகளை செய்ய முடியாது. அதனால் அவருக்கு சுமார் 7 கோடி வரை வருமான இழப்பு நேரிடும் என கூறப்படுகிறது.


Advertisement