விளையாட்டு Covid-19

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் அதிரடி வீரர் அஃப்ரிடிக்கு கொரோனா பாதிப்பு..!

Summary:

Former pakistani cricketer afridi corono test positive

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஃப்ரிடிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் சாதாரண மக்கள் தொடங்கி பிரபலங்கள் வரை பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் அதிரடி கிரிக்கெட் வீரரான அஃப்ரிடி தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுல பதிவில், வியாழக்கிழமை முதல் தனது உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், உடலில் வலி அதிகரிப்பதை உணர்ந்து நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன், பரிசோதனையில் துரதிர்ஷ்வசமாக எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் குணமடைய பிரார்த்தனை தேவை என பதிவிட்டுள்ளார்.

கொரோனாவால் சிரமப்படும் மக்களுக்கு உதவி செய்ய அஃப்ரிடி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டநிலையில்,  அவருக்கே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement