பாகிஸ்தான் அணியின் முன்னாள் துவக்க வீரருக்கு கொரோனா பாதிப்பு!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் துவக்க வீரருக்கு கொரோனா பாதிப்பு!


Former Pakistan Batsman Taufeeq Umar Contracts COVID-19

பாகிஸ்தான் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் தபீக் உமருக்கு கொரோனா சோதனை செய்ததில் அவருக்கு வைரஸ் இருப்பது உறுதியானது. இதனையடுத்து தபீக் உமர் தனிமைப்படுத்தபட்டார். 

தபீக் உமர் 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். பாகிஸ்தானின் டெஸ்ட் கிரிக்கெட் வரிசையில் உமர் ஒரு முக்கிய அங்கமாக இருந்தார். 2001 ஆம் ஆண்டில் அவர் முக்கிய அங்கமாக திகழ்ந்தார். ஒருநாள் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராகவும் விளையாடியுள்ளார். 

2004க்கு பிறகு தபீக் உமர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுப் பெற்றார். இந்நிலையில் தபீக் உமருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததால் அவர் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே மூன்று பாக்கிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்தநிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நான்காவது கிரிக்கெட் வீரராக தபீக் உமர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

corona

இதுகுறித்து பீக் உமர் கூறுகையில், நேற்று இரவு எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இதனால் நானே கொரோனா பரிசோதனை செய்வதற்காக சென்றேன். அங்கு எனக்கு கொரோனா இருப்பது உறுதியானது. ஆனால் எனக்கு கடுமையான அறிகுறிகள் இல்லை. இதனால் என்னை நானே தனது வீட்டில் தனிமை படுத்தி உள்ளேன் என தெரிவித்துள்ளார்.