ரவுடிகளால் தாக்கப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்! வீரர்கள் தேர்வில் ஏற்பட்ட பகையால் பழிதீர்ப்பு

ரவுடிகளால் தாக்கப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்! வீரர்கள் தேர்வில் ஏற்பட்ட பகையால் பழிதீர்ப்பு


former-indian-cricketer-attacked-by-rowdies

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டெல்லியை சேர்ந்த அமித் பண்டாரி. டெல்லியை சேர்ந்த இவர் 2000 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஆடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அமித் தற்பொழுது டெல்லி மாவட்ட கிரிக்கெட் வாரிய தேர்வுக் குழுவின் தலைவராக இருந்து வருகிறார். டெல்லியில் இன்று 23 வயதிற்கு உட்பட்ட அணி வீரர்கள் தேர்வு நடைபெற்றுள்ளது. அந்த வீரர்கள் தேர்வு இவரது தலைமையில் தான் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று மதியம் டெல்லி கஷ்மீரி கேட் அருகே உள்ள செயின்ட் ஸ்டீபன்ஸ் மைதானத்தில் வீரர்கள் தேர்வு நடைபெற்றுள்ளது. அந்த தேர்வின் இடையில் சில ரவுடிகளால் அமித் தாக்கப்பட்டுள்ளார். அந்த ரவுடிகள் இரும்பு கம்பி மற்றும் ஹாக்கி மட்டையைக் கொண்டு அமித்தின் தலை மற்றும் கால்களில் தாக்கியுள்ளனர். 

cricket

இதனைத் தொடர்ந்து பலத்த காயமடைந்த அமித்தை குழுவில் இருந்த சக ஊழியர் சுக்வீந்தர் சிங் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். தாக்கிய ரவுடிகள் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர். மருத்துவமனையில் அமித்திற்கு தலை மற்றும் கால்களில் 7 தையல்கள் போடப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் ரவுடிகளை தேடி வருகின்றனர். இந்த வன்முறையானது அணியில் தேர்வாகாத சில வீரர்களால் தான் தூண்டிவிடப்பட்டிருப்பதாக அமித் தரப்பில புகார் அளிக்கப்பட்டுள்ளது.