இந்தியா

இப்படி ஒரு அப்பன் எந்த பெண் பிள்ளைக்கும் இருக்க கூடாது! டெல்லியில் நடந்த கொடூர சம்பவம்!

Summary:

father give a drink to his daughter


டெல்லியில் குழந்தை பசியால் அழும் நேரத்தில், குழந்தைக்கு பாலுக்கு பதிலாக மதுவை ஊற்றிக் கொடுத்துள்ளார் ஒரு தந்தை. இந்த சம்பவம் மகளிர் ஆணையத்திற்கு தெரியப்பட்டு, குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

டெல்லி பிரேம் நகர் பகுதியைச் சேர்ந்த ரிக்‌ஷா ஓட்டுநர் ஒருவருக்கு 3 வயதில் பெண் குழந்தை இருந்துள்ளது. அவரது மனைவி இறந்த நிலையில், குழந்தையை அவரே வளர்த்துவந்துள்ளார். அவர் வேலைக்கு செல்லும் நேரங்களில் குழந்தையை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு சென்றுவிடுவதாக கூறப்படுகிறது.

tamilnadu tasmak drink க்கான பட முடிவு

அவர் வேலைமுடித்துவிட்டு தினமும் வீட்டிற்கு வரும்பொழுது மதுகுடித்துவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். வீட்டில் குழந்தை அழுதால், குழந்தையின் பால் பாட்டிலில் மதுவை கலந்து குழந்தைக்கு கொடுப்பதை அவர் வழக்கமாக செய்து வந்திருக்கிறார். 

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் டெல்லி மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தின் விரைந்து சென்று குழந்தையை மீட்டனர். மேலும், குழந்தையை மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Advertisement