விளையாட்டு

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம். அதிர்ச்சியில் ரசிகர்கள்.

Summary:

Famous Australian Cricketer Dean Jones Passed Away in Mumbai

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் மரணமடைந்தார்.

ஆஸ்திரேலிய அணியின் மிகவும் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் டீன் ஜோன்ஸ். தற்போது 59 வயதாகும் டீன் ஜோன்ஸ் ஆஸ்திரேலிய அணிக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடியுள்ளார். இதுவரை 52 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 164 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார் டீன் ஜோன்ஸ்.

164 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள டீன் ஜோன்ஸ் 7 சதங்கள் மற்றும் 46 அரைச் சதங்களுடன் 6 ஆயிரத்து 68 ரன்கள் எடுத்துள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு டீன் ஜோன்ஸ் கிரிக்கெட் விமர்சகராக பணியாற்றிவருகிறார்.

இந்நிலையில் கிரிகெட் கமெண்டரி பணிக்காக மும்பையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கி இருந்த டீன் ஜோன்ஸுக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement