england-vs-india-2018
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டனாக திகழ்ந்த எம்.எஸ் தோனி, இந்திய அணிக்கு ஐ.சி.சி,யால் நடத்தப்படும் அனைத்து விதமான தொடர்களிலும் இந்திய அணிக்கு சாம்பியன் பட்டத்தை பெற்று கொடுத்த பெருமைக்கு சொந்தக்காரர். இந்நிலையில் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததற்கு, இந்திய அணி பயிற்சி போட்டியில் விளையாடாததே காரணம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியை கம்பீரமாக வழிநடத்தி வந்த தோனி கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி திடீரென தானாக முன்வந்து தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். கேப்டன் பதவியை ராஜினாமா செய்த தோனி கடந்த இரண்டு வருடங்களாக கோஹ்லி தலைமையில் சாதரண வீரராக எந்தவித எதிர்பார்ப்புமின்றி தனது இந்திய அணிக்காக மட்டும் விளையாடி வருகிறார்.
தோனி கேப்டன் பதவியை ராஜினாமா செய்ததற்கு இது தான் காரணமாக இருக்கும் என கிரிக்கெட் விமர்ச்சககர்கள், முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் தங்களது கருத்தை தெரிவித்திருந்தாலும் தோனி இது குறித்து கடந்த இரண்டு வருடங்களில் எதுவும் வாய் திறுந்து பேசவில்லை.
கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து மவுனம் காத்து வந்த தோனி தற்போது முதன்முறையாக தான் கேப்டன் பதவியில் இருந்து விலகியதற்கான காரணத்தை ஓபனாக தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கேப்டன் பதவியில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்தும் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த தோனி, “2019ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வலிமையான அணியை உருவாக்க முடிவு செய்தோம். 2019ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை கருத்தில் கொண்டும், புதிதாக கேப்டன் பொறுப்பேற்பவருக்கு அவகாசம் கொடுப்பதற்காகவும் தான் 2016ம் ஆண்டிலே எனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தேன், இதற்கு வேறு எந்த காரணமும் இல்லை. மேலும் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் குறித்து தோனி பேசியதாவது, “வெளிநாட்டு மண்ணில் இந்திய பேட்ஸ்மேன்களின் சொதப்பல் ஆட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டே வருவது வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார்...
Advertisement
Advertisement