இந்தியா விளையாட்டு

சிஎஸ்கே அணிக்கு பேரிழப்பு.! முக்கிய வீரர்கள் விளையாட மாட்டார்கள்.? வெளியான முக்கிய தகவல்.!

Summary:

இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறத

இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தவருடம் 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்ற வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன் காரணமாக தற்போது ஐபிஎல் தொடரும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இதனால் அனைத்து வீரர்களின் நலன் கருதி தற்போது ஐபிஎல் போட்டி மறு தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஐபிஎல் தொடரை நடத்தி வரும் பிசிசிஐ ஐபிஎல் தொடர் இந்தாண்டு மீண்டும் இந்தியாவில் நடைபெற வாய்ப்பில்லை என்று கூறியுள்ளது. இந்தநிலையில், இந்த தொடர் மீண்டும் வரும் செப்டம்பர் அல்லது அதற்கு பின் இந்தியாவில் இல்லாமல் மீண்டும், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில், ஐபிஎல் தொடர் மீண்டும் நடத்தப்பட்டால் இங்கிலாந்து வீரர்கள் விளையாடமாட்டார்கள் என்று இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஐபிஎல் தொடர் மீண்டும் எங்கே எப்போது நடக்கும் என்று யாருக்கும் எதுவும் தெரியாது. ஆனால் அப்போட்டிகளை, செப்டம்பர் மாத இறுதியிலும் மற்றும் நவம்பர் மாத இடையிலும் நடத்த வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

ஒருவேளை ஐபிஎல் போட்டிகள் இந்த காலப்பகுதியல் நடைபெற்றால் இங்கிலாந்து வீரர்கள் யாரும் அத்தொடரில் கலந்து கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அப்போது இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தநிலையில் ஐபிஎல் தொடரில் இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை என்றால் சென்னை அணிக்கு பேரிழப்பாக இருக்கும். ஏனென்றால் சென்னை அணியில் சாம்கரன், மொயின் அலி ஆகிய முக்கிய வீரர்கள் இருப்பதால் இது சென்னை அணிக்கு பின்னடைவாகவே இருக்கும் என கருதப்படுகிறது.


Advertisement