இந்தியா விளையாட்டு

நான் இல்லாத கிரிக்கெட்டா, விரைவில் இங்கிலாந்து கிளம்பும் அஸ்வின்; என்ன விஷயம் தெரியுமா?

Summary:

england goundi cricket - traveling - ashwin - england

ஒரு நேரத்தில் இந்திய அணி சுழற்பந்து வீச்சுக்கு அஸ்வினை தான் மலைபோல் நம்பி இருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. மேலும் அவ்வப்போது பேட்டிங் திறனையும் வெளிப்படுத்தி இந்திய அணியில் சிறந்த ஆல்ரவுண்டராக ஜொலித்தவர் தான் தமிழக வீரர் அஸ்வின்.

தற்போது இந்திய டெஸ்ட் அணியில் மட்டுமே விளையாடி வரும் அஸ்வின் ஒரு நாள் போட்டித் தொடர்களில் விளையாட போராடி வருகிறார். இளம் வீரர்களான குல்தீப் யாதவ், சாஹல் போன்ற சுழற்பந்து வீச்சாளர்களின் வருகையும் இவருக்கு அணியில் இடம் கிடைக்காதது ஒரு முக்கிய காரணம் எனலாம். நடந்து முடிந்த ஐபிஎல் 12 வது சீசனில் பந்துவீச்சில் சிறப்பான பங்களிப்பை அளித்தும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காது அவருக்கு மட்டுமல்ல அவரது ரசிகர்களுக்கும் ஏமாற்றமே. 

உலகக் கோப்பை தொடர் வரும் மே 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை இங்கிலாந்து & வேல்ஸில் நடைப்பெற உள்ளது. அதே சமயம் மறுபுறம் இங்கிலாந்தில் உள்ளூர் தொடரான கவுண்டி கிரிக்கெட் தொடரும் நடைப்பெற்று வருகின்றது. இதில் அஸ்வின் நாட்டிங்ஹாம்டிரிங் அணிக்காக விளையாடுவதற்காக ஒப்பந்தமாகி உள்ளார். விரைவில் இங்கிலாந்து பறக்கும் அஸ்வின் அங்கு 5 போட்டிகளில் விளையாடுவார் என தெரிகிறது. 

முன்னதாக 2017ம் ஆண்டு கவுண்டி கிரிக்கெட்டில் வொர்செஸ்டர்ஷைர் அணிக்காக 4 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இரண்டு முறை தலா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement