விளையாட்டு

எனது திருமண வாழ்க்கையை முறித்து கொண்டேன்! அதிரடியாக அறிவித்துள்ள பிரபல இளம் கிரிக்கெட் வீராங்கனை!

எல்லீஸ் பெர்ரி ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார் ஆவார். மைதானத்தில் வெளுத்து வாங்கி அவரது அதிரடி ஆட்டத்தின் மூலம் ஆண்கள் கிரிக்கெட்டுக்கு நிகரான அனைத்து சுவாரஸ்யமும் அதிரடியும் பெண்கள் கிரிக்கெட்டிலும் இருப்பதை நிரூபித்தார்.

கிரிக்கெட், கால்பந்து என இரண்டு விளையாட்டுகளிலும் ஆஸ்திரேலிய தேசிய அணியில் இடம் பிடித்தவர் எல்லீஸ் பெர்ரி. இரண்டு விளையாட்டுகளிலும் முன்னணி வீராங்கனையாகக் களம் கண்ட சிறப்பும் இவருக்கு உண்டு. ஒரு கட்டத்தில் கிரிக்கெட்டை மட்டுமே முழுமையாக ஆடுவதற்கு தேர்ந்தெடுத்தார் எல்லீஸ் பெர்ரி.

கால்பந்தாட்ட வீரர் மாட் டூமுவாக்கும், எல்லீஸ் பெர்ரிக்கும் கடந்த 2015ல் திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது இருவரும் கூட்டாக தங்களது மணமுறிவை அறிவித்துள்ளனர். மெல்போர்ன் ரிபல்ஸ் அணிக்காக கால்பந்தாட்டம் ஆடி வருகிறார் மாட் டூமுவா. இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து இவர்களது மணமுறிவு குறித்து பேச்சு அடிப்பட்டது. 

இந்நிலையில் இருவரும் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒருவர் மீது ஒருவர் மரியாதையுடன் இந்த மணமுறிவு குறித்து கலந்தாலோசித்து முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது தெளிவாக எடுக்கப்பட்ட முடிவு என்பதில் உறுதியாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.


Advertisement