உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது திடீர் நிலநடுக்கம்.! குலுங்கிய மைதானம்..! அதிர்ச்சி வீடியோ

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது திடீர் நிலநடுக்கம்.! குலுங்கிய மைதானம்..! அதிர்ச்சி வீடியோ


Earthquake during the World Cup

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது பூகம்பம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு போட்டியில் டிரின்டாட் பகுதியில் குயின்ஸ் பார்க் மைதானத்தில் ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகள் மோதின.

இந்த போட்டியின் போது ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது ஆட்டத்தின் 11வது ஓவரில் வீரர்கள் விளையாடி கொண்டிருந்த போது, கேமராக்கள் திடீரென்று ஆடியது. இதனை கண்ட பார்வையாளர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது தான், கிரிக்கெட் வர்ணனையாளர் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

அங்கு ஏற்பட்ட நிலநடுக்கம் சுமார் 15 முதல் 20 விநாடிகள் வரை நீடித்தது. ரிக்டர் அளவு கோளில் 5.2 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஆனாலும் நிலநடுக்கம் ஏற்பட்டதை உணராத கிரிக்கெட் வீரர்கள், தங்களது ஆட்டத்தை வழக்கம் போல் தொடர்ந்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.