விளையாட்டு

நேற்றைய போட்டியில் சத்தம் இல்லாமல் தோனி செய்த புதிய சாதனை! என்ன சாதனை தெரியுமா?

Summary:

Dhoni won 100 IPL matches first time in history

சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முதல் ஐபிஎல் போட்டியில் சத்தமில்லாமல் ஒரு சாதனையை படைத்துள்ளார் சென்னை அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி.

நேற்று நடந்த முதல் ஐபிஎல் போட்டியில் மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதின. இதில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி சென்னை அணியை வெற்றி பெறச் செய்தனர். 

இந்த வெற்றி மூலம் சென்னை அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி புது சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். அதாவது சென்னை அணி இதுவரை விளையாடியுள்ள 166 போட்டிகளில் சென்னை அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற தோனி அதில் நூறு வெற்றிகளை சென்னை அணிக்காக பெற்றுக் கொடுத்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் இதுவரை எந்த ஒரு கேப்டனும் நூறு வெற்றிகளை பெற்றதில்லை. அந்த வகையில் தோனி தனது 100வது வெற்றியை நேற்றைய போட்டியில் பெற்று சாதனை படைத்துள்ளார்.


Advertisement