விளையாட்டு

சிங்கம் சூர்யா போல் வந்து இப்போ நந்தா சூர்யா போல் மாறிய தல தோனி! கெட்டப்ப மாத்தினாலும் ஒன்னும் ஒர்கவுட் ஆகல!

Summary:

சிங்கம் சூர்யா போல் வந்த தோனி தற்போது தனது கெட்டப்பை மாற்றி நந்தா சூர்யா போல் மாறியிருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.

சிங்கம் சூர்யா போல் வந்த தோனி தற்போது தனது கெட்டப்பை மாற்றி நந்தா சூர்யா போல் மாறியிருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.

ஐபில் 13 வது சீசன் T20 போட்டிகள் கடந்த மாதம் 19 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இதுவரை 25 போட்டிகள் முடிந்துள்ளநிலையில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் புள்ளி பட்டியலில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளது. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணி புள்ளி பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது.

இந்த சீசனில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுடன் விளையாடியுள்ள இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதுவரை ஒருமுறை கூட முதல் சுற்று போட்டியில் இருந்து வெளியேறாத சென்னை அணி, இந்த முறை முதல் சுற்று போட்டியில் இருந்து வெளியேறிவிடுமோ என்ற அச்சம் சென்னை அணி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணியின் கேப்டன் தோனியின் பங்களிப்பும் இந்த சீசனில் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் ஐபில் போட்டி தொடங்கும்போது சிங்கம் சூர்யா போல் மீசையுடன் கெத்தாக வந்த தோனி நேற்றைய போட்டியில் மொட்டைஅடித்ததுபோல், தாடி, மீசையெலாம் ட்ரிம் செய்துவிட்டு நந்தா படம் சூர்யா போல் மாறியுள்ளார்.

கெட்டப்பை மாற்றினாலும் சென்னை அணி தொடர் தோல்வியில் இருந்து இன்னும் மீளவில்லையே என சென்னை அணி ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.


Advertisement